இந்தி நடிகர் சைப் அலி கானின் மகள் சாரா அலி கான். கேதார்நாத், சிம்பா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். சாரா அலி கான் பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சாரா அலி கான் நேற்று ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிட்டு வெளியே வந்தார். அப்போது அங்கிருந்த புகைப்பட கலைஞர்களுக்கு அவர் போஸ் கொடுத்தார். ரசிகர்கள் சிலர் சாராவுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
அப்போது திடீரென உள்ளே நுழைந்த ரசிகர் ஒருவர் சாராவின் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தார். இதனால் சாரா அதிர்ச்சி அடைந்தார். உடன் இருந்த பாதுகாவலர்கள் அந்த நபரைப் பிடித்து இழுத்து சென்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

