முதன்முறையாக நடிகர் ரஜினியின் படத்திற்கு இசையமைக்க உள்ளார் அனிருத்.
நடிகர் ரஜினியின் உறவினரான இசையமைப்பாளர் அனிருத், 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தப்படத்தில் அவர், இசையமைத்த கொலவெறி பாடல் உலகளவில் பிரபலமாக, தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார்.
விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோரின் படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத், முதன்முறையாக ரஜினியின் படத்திற்கு இசையமைக்கிறார்.
காலா, 2.O படங்களை தொடர்ந்து நடிகர் ரஜினி, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கான நடிகர்கள் தேர்வு, தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வந்த நிலையில், படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகி உள்ளார். இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
முதன்முறையாக ரஜினியின் படத்திற்கு இசையமைக்க இருப்பதால் அதிக உற்சாகத்தில் இருக்கிறார் அனிருத்.