நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி மற்றும் மகள்களுடன் ஹோலி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். தற்போது சூப்பர்ஸ்டார் ஹோலி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ‘காலா’ டீசர் செம ஹிட்டாகி வரும் நிலையில், கலர்ஃபுல்லாக ரஜினி ஹோலி கொண்டாடியுள்ளது அவரது ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது
வட இந்தியர்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக இருப்பது ஹோலி பண்டிகை. பிரச்சனைகள் நீங்கி வாழ்க்கை வண்ணமயமாக மாற வேண்டும் என்பதற்காக, மக்கள் அனைவரும் மற்றவர்கள் மீது வண்ணப்பொடியை தூவி மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ஆகியோருடன் ஹோலி பண்டிகை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இந்தப் படங்களை சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த மகிழ்ச்சியை இரட்டிக்கும் விதமாக, ரஜினி நடிப்பில் தனுஷ் தயாரித்துள்ள ‘காலா’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை இந்த டீசர் 6 மில்லியன் பார்வைகளைத் தொட்டிருக்கிறது.
இன்று ஹோலி பண்டிகை மட்டுமின்றி லதா ரஜினிகாந்த்தின் பிறந்தநாள் கூடவாம். இந்தத் தகவலை சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.