இசையமைப்பாளராக ஒரு படம், நாயகனாக ஒரு படம் என ஒரே நாளில் ஒருவருக்கு இரண்டு படங்கள் வெளியாகியிருக்குமா என்பது சந்தேகம்தான். இசையமைப்பாளராக இருந்து நாயகனாக மாறிய ஜி.வி.பிரகாஷ்குமார், தமிழ் சினிமாவில் நடிகராக ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்க இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கிறார். நேற்று அவருடைய இசையில் உருவான ‘அசுரன்’ படமும், அவர் நாயகனாக நடித்த ‘100 % காதல்’ படமும் ஒரே நாளில் வெளியாகின.
‘அசரன்’ படத்தில் ஜிவி பிரகாஷின் இசையைப் பலரும் பாராட்டி வருகிறார்கள். மீண்டும் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் அவர் இணைந்ததற்கான பாராட்டுக்கள் பலமாக உள்ளன. அதே சமயம் ‘100 % காதல்’ படம் பற்றியும், அதில் ஜிவி பிரகாஷின் நடிப்பு பற்றியும் எந்தவிதமான பாராட்டுக்களும் வெளிவரவில்லை. இசையமைப்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள ஜி.வி. பிரகாஷ், நடிகராக சரியான படங்களைத் தேர்வு செய்யத் தவறுகிறார் என்றே பலரும் குறிப்பிடுகிறார்கள்.

