Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நடிகர் சங்க தேர்தல் : நடைமுறை தொடர ஐகோர்ட் அனுமதி

February 17, 2020
in Cinema
0

நடிகர் சங்கத்திற்கு கடந்த ஜூன் 23 ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் தபால் ஓட்டுக்கள் போட அனுமதிக்கவில்லை என உறுப்பினர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் முறையிட்டனர்.

இவ்வழக்குகளை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டதுடன், அடுத்த 3 மாதங்களுக்குள் மறுதேர்தல் நடத்தவும் உத்தரவிட்டார். இந்த தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமிக்கப்பட்டார். நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் முடிந்த பிறகு எடுத்த எந்த முடிவுகளும் செல்லாது என கூறிய ஐகோர்ட், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படும் வரை சங்க நிர்வாகத்தை தனி அதிகாரி கவனிப்பார் எனவும் தெரிவித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இதில், நடிகர் சங்க தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும். மீண்டும் தேர்தல் நடத்தும் நடைமுறையை தொடர அனுமதி அளித்தது. மேலும், ஐகோர்ட் ஒப்புதலின்றி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடக் கூடாது. சிறப்பு அதிகாரி நியமனம் செல்லும். தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கும் சேர்த்து விசாரணைக்கு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Previous Post

‘ஜெயில்’ ரீலீஸ், வசந்தபாலன் வருத்தப் பதிவு

Next Post

பெரும் தோல்வி அடைந்த ‘ஜானு’

Next Post

பெரும் தோல்வி அடைந்த 'ஜானு'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures