தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக வெற்றி நாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, 15 ஆண்டுகளை கடந்தும் இன்னமும் அதே உடலமைப்புடனும், அழகுடனும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். த்ரிஷா நடிப்பில் விரைவில் ராங்கி உள்பட நான்கு படங்கள் வெளியாக உள்ளன.
இந்நிலையில் த்ரிஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது திருமணக் கனவு குறித்து பேசியுள்ளார். திருமணத்தில் தனக்கு அவ்வளவாக இஷ்டமில்லை என கூறியுள்ள அவர், ஒருவேளை தனக்கு திருமணம் நடந்தால் அது அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் தான் நடக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே நடிகர் ராணாவும், த்ரிஷாவும் காதலிப்பதாக ஒரு தகவல் முன்பு உலா வந்தது. அதனை உறுதி செய்வது போல் பல நிகழ்ச்சிகளில் இருவரும் சேர்ந்தே காணப்பட்டனர். அப்போது தமிழ் சினிமாவில் அது தான் பேச்சாக இருந்தது. ஆனால் காரணம் தெரியாமலே அவர்களது காதல் முறிந்தது.
அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் வருண் மணியனுடன் த்ரிஷாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பின்னர் அதுவும் தோல்வியில் முடிவடைந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

