அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடித்து வரும் நடிகை நித்யாமேனன். விஜய்யின் மெர்சல் உள்பட பல படங்களில் நடித்தவரான இவர், தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் தி அயர்ன் லேடி படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு ஊதி பெருத்து விட்ட நித்யாமேனனை பலரும் கிண்டல் செய்ததை அடுத்து டயட்ஸ் கடைபிடித்து தற்போது ஓரளவு வெயிட் குறைத்துள்ளார். அதோடு, தான் நடித்த படங்களில் கவர்ச்சிகரமாக நடிக்காத அவர், தற்போது ஒரு பிரபல பத்திரிக்கையின் அட்டைப்படத்துக்கு தொடை தெரியும்படி கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
படங்களில் கவர்ச்சிக்கு தடைபோட்டு விட்டு மேகஸின் அட்டைப்படத்திற்கு அவர் தாராளமாக கவர்ச்சி போஸ் கொடுத்திருப்பதை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

