தமிழில் அமரகாவியம் படம் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை மியா ஜார்ஜ். அதன்பிறகு இன்று நேற்று நாளை, ஒரு நாள் கூத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மலையாளத்திலும் அவ்வப்போது சில படங்களில் நடித்துவரும் இவர் பெரும்பாலும் சீரியஸான அல்லது ரொமான்டிக்கான படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான டிரைவிங் லைசென்ஸ் படம் இவருக்குள் இருந்த நகைச்சுவை திறமையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
இந்த படத்தில் கதாநாயகன் பிரித்விராஜ் என்றாலும் அவருக்கு இணையான இன்னொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடுவுக்கு ஜோடியாகத்தான் நடித்துள்ளார் மியா ஜார்ஜ். இந்த படத்தில் அவ்வப்போது தனது ஒன்லைன் காமெடி வசனங்களால் தியேட்டரை கலகலக்க வைத்திருக்கிறார் மியா ஜார்ஜ்.
இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மியா ஜார்ஜ் தன்னால் முடியுமா என்று தயங்கியபோது, உன்னால் முடியும் என்று பிரித்விராஜ் தான் அவருக்கு தைரியம் கொடுத்து இந்த படத்தில் நடிக்க வைத்தாராம். பிரித்விராஜன் கணிப்பு பொய்யாகாதபடி, இந்த படத்தில் மியா ஜார்ஜின் கதாபாத்திரத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

