நடிகை பிரியாமணிக்கும் தொழிலதிபர் முஸ்தபா ராஜுக்கும் வரும் 23-ஆம் தேதி பெங்களூரில் திருமணம் நடைபெறுகிறது. ‘கண்களால் கைது செய்’ என்ற படத்தின் மூலம் இயக்குநர் பாரதிராஜாவால் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் பிரியாமணி. அது ஒரு கனாக்காலம், தோட்டா, நினைத்தாலே இனிக்கும், மலைக்கோட்டை உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.