Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sports

தேசிய சுப்பர் லீக் போட்டியில் நுவனிந்து பெர்னாண்டோவின் தொடர்ச்சியான 2 ஆவது சதம்

February 11, 2022
in Sports
0
தேசிய சுப்பர் லீக் போட்டியில் நுவனிந்து பெர்னாண்டோவின் தொடர்ச்சியான 2 ஆவது சதம்

தேசிய சுப்பர் லீக் கிரிக்கட் போட்டியில் கொழும்பு வீரர் நுவனிந்து பெர்னாண்டோ தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் சதம் விளாசியுள்ளார்.

பல்லகெலே சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் கண்டி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் இரண்டாவது முறையாகவும் சதம் விளாசினார்.

தற்சமயம் தேசிய சுப்பர் லீக்கில் இரண்டு சதங்கள் அடித்த ஒரே பேட்ஸ்மேன் என்ற சாதனையை நுவனிந்து பெர்னாண்டோ பெற்றார்.

நம்பர் 3 பேட்ஸ்மேனாக களமிறங்கிய நுவனிந்து மொத்தமாக 133 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 112 ஓட்டங்களைப் பெற்றார்.

நுவனிந்து இந்த சதத்தை பெற்றதன் மூலம் இந்த ஆண்டு தேசிய சுப்பர் லீக்கில் அதிக சதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றார்.

இதற்கு முன்னதாக அவர் தம்புள்ள‍ை அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசியிருந்தார்.

6 போட்டிகளில் விளையாடியுள்ள நுவனிந்து 2 சதம் மற்றும் ஒரு அரை சதத்துடன் 328 ஓட்டங்களை குவித்துள்ளார். நுவனிந்துவின் இன்னிங்ஸ் சராசரி 54.66 ஆகும் அதேவேளையில் அவரது அதிகபடியான ஓட்ட எண்ணிக்கை 112 ஆகும்.

நுவனிந்துவின் சதம் இந்த சீசனில் பதிவான 5 ஆவது சதம் ஆகும்.

முன்னதாக, ஓஷத பெர்னாண்டோ (138), தனஞ்சய டி சில்வா (102), சித்தர கிம்ஹான் (110), நுவனிந்து பெர்னாண்டோ (100) ஆகியோர் சதம் விளாசினர்.

நுவனிந்துவின் இன்னிங்ஸால் கண்டிக்கு எதிரான இன்றைய போட்டியில் கொழும்பு அணி 49.3 ஓவர்களில் 271 ஓட்டங்களை எடுத்தது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

சுசீந்திரனின் ‘வீரபாண்டியபுரம்’ இசை வெளியீடு

Next Post

மூன்றாவது நாளாக முப்பதைத் தாண்டிய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை

Next Post
ஒமிக்ரோன் தொற்று குறித்த அச்சம் தேவையற்றது | மருத்துவ நிபுணர்கள் விளக்கம்

மூன்றாவது நாளாக முப்பதைத் தாண்டிய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures