Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தேசிய அளவில் தூதுவராகும் பூனம் கவுர்!

August 9, 2020
in Cinema
0

தமிழில் நெஞ்சிருக்கும்வரை படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் பூனம் கவுர். பயணம், என் வழி தனி வழி, 6 மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், தற்போது தெலுங்கு சிரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

கைத்தறி ஆடைகள் மீது அதிக விருப்பம் கொண்டவர் பூனம் கவுர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கைத்தறி பொருட்களை ஊக்குவிக்கும் விதமான பதிவுகளை தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். இதனால் அவரை ஆந்திர மாநில கைத்தறி பொருட்கள் தூதுவராக அம்மாநில அரசு நியமித்தது.

இந்நிலையில் கைத்தறி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இணையதள கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார் பூனம். அதில் மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கியும் கலந்து கொண்டார். கருத்தரங்கில் பூனம் கைத்தறி பற்றி கவிதை எழுதி வாசித்துக் காட்டினார்.

அதனைத் தொடர்ந்து பூனத்தின் செயல்பாடுகளைப் பாராட்டிய அமைச்சர், ‘அவரை தேசிய கைத்தறி பொருட்கள் தூதுவராக நியமிக்க’ பரிந்துரை செய்வதாக தெரிவித்துள்ளார். இதனால் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளார் பூனம் கவுர்.

Previous Post

சின்னி ஜெயந்த் மகனுக்கு ரஜினி, கமல் வாழ்த்து

Next Post

மூச்சு திணறல் – சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி

Next Post

மூச்சு திணறல் - சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures