மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி படத்தின் தெலுங்கு மொழியாக்கம் மூலம் தெலுங்கிலும் நுழைந்த துல்கர் சல்மானுக்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் வெளியான மகாநடி படத்தின் வெற்றி துல்கர் சல்மானை தெலுங்கில் இன்னும் பிரபலப்படுத்தி உள்ளது..
இந்தநிலையில் நடிகர் வெங்கடேஷ் நடிக்கவுள்ள டபுள் ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றில் இன்னொரு ஹீரோவாக துல்கர் சல்மான் நடிக்கவுள்ளாராம். போர் பின்னணியில் இந்தப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்தப்படத்தின் கதை பிடித்துப்போய் வெங்கடேஷும் துல்கரும் ஓரிருமுறை நேரில் சந்தித்து கதை பற்றி விவாதித்துள்ளார்களாம்.

