சமீபகாலமாக தாங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு தாங்களே டப்பிங் பேசுவதில் நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், யுடர்ன் படத்தில் இருந்து தனக்கான டப்பிங்கை தானே பேசி வருகிறார் சமந்தா.
அதேபோல் மலையாள நடிகரான மம்மூட்டி, தெலுங்கில் தான் நடித்துள்ள யாத்ரா படத்திற்காக டப்பிங் பேசியிருக்கிறார். அதேபோல் மலையாள நடிகையான அனுபவமா பரமேஸ்வரனும் தெலுங்கில் தான் நடித்துள்ள ஹலோ குரு பிரேம கோஷம் என்ற படத்திற்காக டப்பிங் பேசி வருகிறார்.
ஆரம்பத்தில் மலையாளம், தமிழ் படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாகி இருக்கிறார். அதன்காரணமாகவே தெலுங்கு பேச பயிற்சி எடுத்து வந்த அவர், தனக்குத் தானே டப்பிங் பேசுகிறார்.
