சமீபத்தில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் சைக்கோ கில்லர் வில்லனாக நடித்திருந்தவர் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப். அந்த படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டது. அதையடுத்து, தான் ரஜினிகாந்த் படத்தில் வில்லனாக நடிக்கவும் ஆர்வமாக இருப்பதாக சொன்னார்.
அனுராக் காஷ்யப் இயக்கிய மன்மர்சியன் படம் செப்டம்பர் 8-ந்தேதி வெளியானது. அபிஷேக் பச்சன் நடித்த அந்த படத்தில் டாப்சி நாயகியாக நடித்திருந்தார்.
அடுத்தபடியாக அனுராக் காஷ்யாப் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார் டாப்சி. உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் இப்படத்தில் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடிக்கிறார். துஷார் ஹிராநந்தினி இயக்குகிறார். ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கியிருக்கும் நிலையில், தற்போது டாப்சிக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

