ஹீரோ, வில்லன் என பல படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அவர் நடிக்கும் படங்களில் ஒன்று ‘துக்ளக் தர்பார்’. அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்டவர்களுடன் பார்த்திபனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அரசியல் சார்ந்த கதையில் தயாராகும் இப்படத்தை டில்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்பு சுமார் 50 சதவீதம் முடிவுற்றுள்ளது. இதர படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கவுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. மேஜை மீது கை வைத்தபடி அமர்ந்திருக்கும் விஜய் சேதுபதி நேரில் ஒரு தோற்றத்தில் மேஜை மீதுள்ள பிம்பத்தில் வேறு ஒரு தோற்றத்திலும் உள்ளார். இதை பார்க்கும் போது சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தின் போஸ்டரை ஞாபகப்படுத்துகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுயோஸ் லலித் குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

