1973 புரூஸ்லீ நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் ‘என்டர் தி டிராகன்’. தற்போது இந்த படத்தின் பெயரிலேயே மலையாளத்தில் உருவாக இருக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் நடிகர் திலீப். முழுக்க முழுக்க மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை மையப்படுத்தியும் அதேசமயத்தில் திலீப்பின் நகைச்சுவைக்கு குறைவில்லாமலும் இந்த படம் உருவாக இருக்கிறதாம். இந்தப்படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு சீனாவிலும் நடைபெற இருக்கிறதாம்.
அடுத்த வருட துவக்கத்தில் ஆரம்பிக்கப்படும் இந்த படம் 2020 ஓணம் பண்டிகை ரிலீசாக வெளியாகும் என்றும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குனரான ஷாஜி சுகுமார் என்பவர் இயக்க உள்ளார். பிரபல மலையாள இயக்குனரான ரபி மெக்கார்டின் தான் இந்த படத்திற்கு கதை எழுதுகிறார். இவர் ஏற்கனவே திலீப் நடித்த சில படங்களை இயக்கியுள்ளதோடு தென்காசி பட்டணம் 2 கண்ட்ரீஸ் என திலீப்பின் வெற்றி படங்களுக்கு கதையும் எழுதியுள்ளார்.

