கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் மிருதுளா முரளி. ரெட் சில்லிஸ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அங்கு சில படங்களில் நடித்து விட்டு, தமிழில் ‛அமைதிப்படை 2’ம் பாகத்தில் நடித்தார். அதன் பிறகு தமிழில் பெரிய வாய்ப்ப இல்லாமல் மலையாள சினிமாவுக்கு திரும்பினார். சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ‛சிக்கிக்கு சிக்கிக்கிச்சு’ என்ற படத்தில் நடித்தார். கடைசியாக தம்பி ராமய்யா மகன் ஜோடியாக ‛மணியார் குடும்பம்’ படத்தில் நடித்தார்.
மிருதுளா இப்போது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். கேரளாவை சேர்ந்த உதவி இயக்குனர் நிதின் மாலினி விஜய் என்பவரை காதலித்து வந்தார். தற்போது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் . இவர்களின் நிச்சயதார்த்தம் கொச்சியில் நடந்தது. இதில் நடிகை பாவனா நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மலையாள நடிகர், நடிகைகளும் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்தினார்கள். திருமணம் அடுத்த ஆண்டு மார்ச்ச மாதம் நடக்கும் என்று தெரிகிறது. தேதி இன்னும் முடிவாகவில்லை.

