மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான போனி கபூரின் முதல் மனைவி மகன் அர்ஜுன் கபூர். இந்தி சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அர்ஜுனும், நடிகை மலைகா அரோராவும் காதலித்து வருகின்றனர்.
கணவரை பிரிந்து வாழும் மலைகாவுக்கு, 16 வயதில் ஒரு மகன் இருக்கிறான். விரைவில் அர்ஜுன், மலைகா திருமணம் நடைபெறும் என பாலிவுட்டே எதிர்பார்த்து வருகிறது. சமீபத்திய பேட்டியில் கூட தன் திருமணம் எங்கு, எப்படி நடைபெற வேண்டும் என்ற தன் விருப்பத்தை மலைகா கூறியிருந்தார்.
இந்நிலையில், அர்ஜுன் கபூர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘இப்போது திருமணம் செய்துகொள்ள வேண்டிய அவசரம் எதுவும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார். மேலும், “நேரம் வரும் போது நாங்களே எங்களது திருமணத்தைப் பற்றிச் சொல்கிறோம். எப்போது திருமணம் செய்ய வேண்டும் என்பதை நாங்கள் இருவரும் சேர்ந்து முடிவு செய்வோம்”, எனக் கூறியுள்ளார்.

