விஷால் ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் தினேஷ் ரெட்டியின் மகள் அனீஷாவை திருமணம் செய்ய இருக்கிறார். முதலில் அனீஷா தொழில் அதிபர் மகள் என்றே அறியப்பட்டாலும். அவரும் ஒரு நடிகை சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்துள்ளார். அவர் ஹீரோயினாக நடிக்கும் ஒரு படத்தை விஷால் வெளியிடுவதாக இருந்தார். இந்த சந்திப்பின்போதுதான் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விஷால் கூறியிருப்பதாவது:
அயோக்யா படத்தின் படப்பிடிப்பு விசாகபட்டினத்தில் நடந்து கொண்டிருந்தபோதுதான் அனீஷா என்னை சந்தித்தார். அவரும் அவரது நண்பர்களும் இணைந்து மைக்கேல் என்ற படத்தை எடுத்து வருவதாகவும் அதில் அனீஷா ஹீரோயினாக நடிப்பதாகவும் சொன்னார். அதோடு அந்தப் படம் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் எடுக்கப்படும் விவசாயம் சம்பந்தமான படம் என்றார்கள். அது எனக்கு பிடித்துவிடவே. அந்தப் படத்தை நானே வெளியிடுகிறேன் என்று சொன்னேன்.
இது தொடர்பாக நாங்கள் அடிக்கடி சந்தித்தபோதுதான் காதல் வந்தது. முதலில் நான் காதலை சொன்னேன். மிகவும் யோசித்து அனீஷா ஏற்றுக் கொண்டார். அனிஷா தேசிய கூடைப்பந்து வீராங்கணை, சமூக சேவகி, நடிகை என பன்முகம் கொண்டவர். திருமணத்துக்கு பிறகு அவர் நடிக்க விரும்பினால் அதற்கு நான் தடைபோட மாட்டேன் என்று கூறியிருக்கிறார் விஷால்.

