தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் நடிகர் சங்கப் பொதுச் செயலர் விஷால். அப்படி போட்டிப் போடும் போது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு சவாலாக இருக்கும், இணைய தளங்களை முடக்க, அரசுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன்படி, போலீசுடன் சேர்ந்து ஆண்டி பைரசி செல்லை ஏற்படுத்தி, அதை தீவிரமாக செயல்பட வைத்ததன் மூலம், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சவாலாக இருந்து செயல்பட்ட 20க்கும் அதிகமான இணையதளங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஷால் கூறினார்.
இதன் மூலம், திரையிடும் நாளிலேயே, இணைய தளம் வாயிலாக படம் பார்க்கும் நிகழ்வு இனி நடக்காது எனவும் அவர் கூறியிருக்கிறார்.