தினகரன் தலைமையில் அதிமுக பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் என்று திவாகரன் கூறியுள்ளார்.
அதிமுகவில் பிரிந்திருந்த ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இரு அணிகள் இணைந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்குவது குறித்த முடிவு பொதுக்குழுவில் எடுக்கப்பட உள்ளது.
இந்நிலையில், தினகரன் தலைமையில் அதிமுக பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் என்று திவாகரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று திருவாரூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ”பொதுக்குழு என்று எடப்பாடி பழனிசாமி அணியினர் 2000 பேரை வரவழைத்து ஒரு தீர்மானம் நிறைவேற்றினால், அது மாதிரி நாங்களும் செய்யலாமே. இதெல்லாம் ஜோடனைதான். அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் தினகரன் பொதுக்குழுவை கூட்ட வாய்ப்பு உள்ளது. விரைவில் பொதுக்குழுவை கூட்டுவோம்” என்று திவாகரன் கூறினார்.