நடிகர்கள் விதார்த், உதயா இணைந்து நடிக்கும் படம் ‘அக்னி நட்சத்திரம்’. ‘தாதா 87’ படத்தில் நடித்த ஸ்ரீபல்லவி, ஸ்மிருதி வெங்கட் என இரண்டு கதாநாயகிகள். அறிமுக இயக்குநர் ஷரன் இயக்குகிறார்.
1988இல், பிரபு, கார்த்திக் இணைந்த நடிக்க, இதே தலைப்பில் மணிரத்னம் இயக்கிய படம் வெளியானது. “முன்பு வெற்றி பெற்ற ஒரு படத்தின் தலைப்பு கிடைத்ததில் ஒட்டுமொத்த படக்குழுவும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
இரு படங்களுக்கும் தலைப்பைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இருக்காது. இது திகில் படமாக உருவாகிறது.
விறுவிறுப்பான திரைக்கதையுடன், வழக்கமான காதல், உணர்வுப்பூர்வமான காட்சிகள் இதில் இருக்கும். சென்னை, ஏலகிரி, வேலூர், கோவை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது,” என்கிறார் இயக்குநர் ஷரன்.

