மத்திய கமத்தொழில் அமைச்சினால் மாகாண விவசாய திணைக்களத்தின் ஊடாக கொவிட் 19 அவசர நிலைமைகளின் கீழ் உலகவங்கி நிதியுதவியில் விவசாயிகளுக்கான களஞ்சிய வசதிகளை கட்டமைக்கும் செயற்றிட்டத்தின் கீழ் மல்லாவி பகுதியில் தானியக் களஞ்சியத்துக்கான அடிக்கல் இன்று மாலை 3 மணிக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான காதர் மஸ்தான் அவர்களால் நாட்டி வைக்கப்பட்டது
முல்லைத்தீவு மாவட்ட பதில் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி யா.சசீலன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான காதர் மஸ்தான் வடமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் பிறேம்குமார் துணுக்காய் பிரதேச செயலாளர் வவுனிக்குளம் நீர்ப்பாசன பொறியியலாளர் விவசாய அமைச்சின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டிவைத்தமை குறிப்பிடத்தக்கது.