இந்தியத் திரையுலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாக தாதா சாகேப் பால்கே விருது இருக்கிறது. இந்தியாவின் முதல் முழு நீளத் திரைப்படமாகக் கருதப்படும் ராஜா ஹரிஷ்சந்திரா படத்தை இயக்கியவர்தான் தாதா சாகேப் பால்கே.
1969ம் ஆண்டு முதல் தாதா சாகேப் பால்கே விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எல்.வி.பிரசாத், பி.நாகிரெட்டி, நாகேஸ்வரராவ், சிவாஜிகணேசன், கே.பாலசந்தர், கே.விஸ்வநாத் உள்ளிட்ட தென்னிந்தியத் திரைப் பிரபலங்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
அமிதாப்பச்சன் என்ற பொங்கி எழும் நெருப்புடன் ஒப்பிடுகையில் இதற்கு முன் விருது பெற்ற பலரும் எந்த விதத்திலும் பொருந்த முடியாது. எனவே, நான் தாதாவாலும் சரி, சவால் விட்டுச் சொல்கிறேன், தாதாவின் ஒரு படத்தைக் கூடப் பார்க்காத விருது குழுவின் உறுப்பினர்களாலும் ஈர்க்கப்படவில்லை,” என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய சினிமாவின் முதல் படமாக வெளிவந்த ராஜா ஹரிஷ்சந்திரா படத்தை தயாரித்து இயக்கி வெளியிட்டதை விட தாதா சாகேப் பால்கேவுக்கு வேறு என்ன சிறப்பு வேண்டும். அவர் இல்லை என்றால் ராம்கோபால் வர்மா போன்றவர்கள் எல்லாம் இப்படி பேசுவார்களா என்பதே நடந்திருக்காத ஒன்று.

