ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில், அனுஷ்கா, மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ள படம் நிசப்தம். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், மலையாளம் என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. முதலில் அடுத்த மாதம் நிசப்தம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது வெளியீடு திகதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து விசாரித்தபோது, படம் பெரிய அளவில் வியாபாரம் ஆகவில்லையாம். இதன் காரணமாகவே படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம்.

