தனுஷ் நாயகனாக நடிக்க உள்ள படத்தை செல்வராகவன் இயக்கப் போவதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன. ஆனால், அந்தப் படம் தற்போது தள்ளிப் போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தனுஷ் ‘பட்டாஸ்’ படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
இதையடுத்து ‘யாரடி நீ மோகினி, குட்டி’ ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளார். இப்படத்திற்குப் பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்காக ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் தனுஷ்.
இந்தப் படங்களின் படப்பிடிப்பு முடிவதற்கே வருடம் ஓடி விடும். இடையில் அவர் எப்படி செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க முடியும் எனக் கேட்கிறார்கள். இப்படத்திற்காக ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டதாகக் கூடச் சொன்னார்கள். இருந்தாலும் இப்போதைக்கு இந்தப் படம் ஆரம்பமாகாது என்றே தெரிகிறது.

