மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் தலைவி படத்தை, ஏ.எல்.விஜய் இயக்க, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்காக பரதநாட்டியம் உள்ளிட்ட சில பயிற்சிகளை எடுத்துக்கொண்டு கடந்த வாரம் முதல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். இப்படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார்.
இதுதவிர ஜெயலலிதாவுடன் நடித்துள்ள பிரபல நடிகர்களின் கதாபாத்திரங்களிலும் சில இளவட்ட நடிகர்கள் நடிக்கிறார்கள். அவர்களில் பிரபல தெலுங்கு நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான என்டிஆரின் வேடத்தில் அவரது பேரன் ஜூனியர் என்டிஆர் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

