ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் படம் தலைவி. தமிழ், ஹிந்தியில் தயாராகி வரும் இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத் நடிக்க, எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடிக்கிறார். இவர்களில் கங்கனாவின் பர்ஸ்ட் லுக் வெளியானபோது விமர்சனங்கள் எழுந்தநிலையில், அரவிந்த்சாமியின் எம்ஜிஆர் கெட்டப் வெளியானபோது அச்சு அசலாக எம்ஜிஆரைப்போலவே அவர் இருப்பதாக நல்ல விமர்சனங்கள் கிடைத்தது.
இந்த நிலையில் தற்போது ஜெயலலிதாவுடன் நடித்த மற்ற பிரபல நடிகர் நடிகைகள் சம்பந்தப்பட்டவர்களை தேர்வு செய்து வரும் ஏ.எல்.விஜய், ஷோபன் பாபு வேடத்தில் நடிப்பதற்கு பெங்காலி நடிகர் ஜிஷு சென்குப்தா என்பவரை தேர்வு செய்திருக்கிறார். அதையடுத்து ஷோபன்பாபு ரோலில் நடிப்பதற்காக அவர் நடித்த படங்களை பார்த்து வருகிறாராம் ஜிஷு சென்குப்தா. இவர் தெலுங்கில் என்டிஆர் கதாநாயகுடு, அஷ்வந்தம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

