வில்லனாக அறிமுகமான பாபிசிம்ஹா பின்னர் கதநாயகனாக உயர்ந்தார். அவர் ஹீரோவாக நடித்த படங்கள் வெற்றியடையவில்லை. எனவே கருப்பன் படத்தின் மூலம் மீண்டும் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில் மீண்டும் ஹீரோவாக ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் பாபி சிம்ஹா. ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் மதுபாலா விவ்லியாக நடிக்கிறார். ‘அக்னிதேவ்’ என்று பெயர் சூட்டப்பட்ட இந்தப்படத்தை ‘சென்னையில் ஒரு நாள்’ பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கி உள்ளனர்.
இந்நிலையில் சில பிரச்னைகளால் இந்தப்படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. அக்னிதேவ் என்ற டைட்டிலை ‘அக்னி VS தேவி’ என்று மாற்றியுள்ளனர்.

