தர்பார் படத்துக்கான டப்பிங் வேலைகளை அடுத்த வாரம் துவக்க உள்ளார் நடிகர் ரஜினி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் தர்பார். நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ரஜினி இதில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
தர்பார் படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்திறக்கான டப்பிங் பணிகளை அடுத்த வாரத்தில் ரஜினி துவங்க உள்ளார். நவம்பர் 15ம் தேதி முதல் ஒரே கட்டமாக தர்பார் படத்திற்கான டப்பிங்கை பேசி முடிக்க அவர் திட்டமிட்டுள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.
அனிருத் இசையில் நேற்று முன்தினம் வெளியான தீம் மியூசிக் மற்றும் மோஷன் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தர்பார் திரைப்படம் 2020 பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

