வி4 எம்.ஜி.ஆர்., – சிவாஜி 2019′ சினிமா விருது வழங்கும் விழா, பிரமாண்டமாக நடந்தது. இதில் பேசிய, அபிராமி திரையரங்க உரிமையாளர் ராமநாதன், ”படம் வெளியான, 30வது நாளிலேயே, இணையதள, ‘ஆப்’களில், தயாரிப்பாளர்கள் வெளியிடுகின்றனர்.
இதனால், திரையரங்கத்திற்கு வர, மக்கள் விரும்புவதில்லை. இந்நிலையை, தயாரிப்பாளர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்,” என்றார்.
அடுத்து பேசிய, தயாரிப்பாளர் தாணு, ”திரையரங்க வசூலில், தயாரிப்பாளர்களுக்கு உரிய பங்கை வழங்கினால், நாங்கள் ஏன், ‘ஆப்’களுக்கு படத்தை விற்கப் போகிறோம்?” எனக் கேள்வி எழுப்பினார்.
ஏற்கனவே, ’30 நாட்களுக்குள், ‘ஆப்’களில் படத்தை வெளியிடும் தயாரிப்பாளர்களின் அடுத்தடுத்த படங்களுக்கு, தடை விதிப்போம்’ என, திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது, குறிப்பிடத்தக்கது.

