Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தயாரிப்பாளரான தனுஷின் வில்லன்

February 13, 2019
in Cinema
0

மலையாள சினிமாவில் கடந்த இரண்டு வருடங்களாக முன்னணி ஹீரோவாக வெற்றிப்படிக்கட்டுகளில் ஏறி வருபவர் இளம் நடிகர் டொவினோ தாமஸ். மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் கால் பதித்த இவர், சில மாதங்களுக்கு முன்பு வெளியான தனுஷின் மாரி-2 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த நிலையில் முதன்முதலாக தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் டொவினோ தாமஸ்.

இந்தப்படத்திற்கு கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ‘2 பெண் குட்டிகள்’ மற்றும் ‘குஞ்சு தெய்வம்’ படங்களை இயக்கிய ஜியோ பேபி இயக்குகிறார். இந்த படத்தின் கதை இதுவரை தான் கேள்விப்படாத ஒன்று என்பதை உணர்ந்த டொவினோ தாமஸ், இதை தானே தயாரிக்கும் முடிவுக்கு வந்தாராம்..

அப்படி தான் தயாரிக்கும் முதல் படத்தை மோகன்லால் தான் துவங்கி வைக்க வேண்டும் என நினைத்த டொவினோ தாமஸ், மோகன்லாலிடம் விஷயத்தை கூறி அதை சாதித்தும் உள்ளார். ஆம்.. இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை அறிமுகப்படுத்தி வெற்றிக்கான ஆரம்பத்தை துவக்கி வைத்துள்ளார் மோகன்லால்.

Previous Post

முடிவுக்கு வந்தது 30 வருட பனிப்போர்

Next Post

ரகுல் பிரீத் சிங் நடிப்பில் அரை டஜன் படங்கள்

Next Post

ரகுல் பிரீத் சிங் நடிப்பில் அரை டஜன் படங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures