எம்புட்டு இருக்குது ஆசை என உதயநிதி ஸ்டாலினின் ரொமான்சுக்கு ஆளானவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் சென்னைப் பொண்ணு. டிச., 13, 1990ல் பிறந்தவர். இவருக்கு வயது தற்போது, 29.
தன்னுடைய நடிப்பு மற்றும் கவர்ச்சியால் தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் ரசிகர்களை கவர்ந்திருக்கும் சென்னை பொண்ணான, ரெஜினா கசாண்ட்ராவின் 29வது பிறந்த நாளை, இன்று அவர் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். அவர், தற்போது நடிகர் அருண் விஜய்யின் ஏ.வி., 31 படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, இன்று, நடிகர் அருண் விஜய்யுடன் இணைந்து கேக் வெட்டி, தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார் ரெஜினா கசாண்ட்ரா.
இது குறித்து, நடிகை ரெஜினா கூறியிருப்பதாவது:
மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. சென்னைப் பெண்ணான எனக்கு, தமிழில் அதிக வாய்ப்புகள் வர வேண்டும் என ஏங்குகிறேன். கதைக்கேற்ப தேவையென்றால் கவர்ச்சியாகவும் நடிக்கத் தயாராக இருக்கிறேன். என்னுடைய வயதைக் கேட்டு பலரும் ஆச்சரியப்படுகின்றனர். வயதெல்லாம் நடிகைக்கு ஒரு பொருட்டல்ல. நல்ல படங்களில், நல்ல கதையம்சம் இருக்கும் படங்களில், நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வர வேண்டும். அதுதான் முக்கியம். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

