600 கோடி ரூபாய் செலவில் நான்கு ஆண்டுகால உழைப்பில் உருவான 2.0 படத்தை, 8 மணி நேரத்திலேயே தமிழ் ராக்கர்ஸ் பைரசி இணையதளம் வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இத்தனைக்கும் இணையதளங்களில் 2.0 படத்தை வெளியிட நீதிமன்றத் தடை உத்தரவு உள்ளது.
அதையும் மீறி லைகா போன்ற பெரிய நிறுவனங்களின் படங்களும் இப்படி வெளிவருகிறது என்றால், மற்ற சிறிய தயாரிப்பாளர்கள் என்ன செய்வார்கள். சினிமா எப்படி பிழைக்கும், இந்த திருட்டு தனத்தை யார் நிறுத்துவது என கோலிவுட்டில் புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.
தமிழ் ராக்கர்சில் 2.0 படம் திருட்டுத் தனமாக வெளியானது குறித்து படத் தயாரிப்பு நிறுவனமான லைகா வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. “4 ஆண்டுகால உடின உழைப்பு, பல கோடி ரூபாய் பணம், 1000 தொழில்நுட்பக் கலைஞர்களின் முயற்சி, அனைத்துமே உங்களுக்கு விஷுவலாக பிரம்மாண்டத்தைத் தர உழைத்துள்ளார்கள். அதை தியேட்டர்களில் பார்த்து ரசியுங்கள். அந்த அனுபவத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள். பைரசியை வேண்டாம் என்று சொல்லுங்கள்,” எனக் கேட்டுக் கொண்டுள்ளது.