பொதுவாக தமிழ் சினிமாவுக்கு சிக்ஸ் பேக் வைத்த வில்லன் வேண்டும் என்றால் பாலிவுட், ஹாலிவுட்டிலிருந்து அழைத்து வருவார்கள். ஆனால் தற்போது தமிழில் ஒரு சிக்ஸ்பேக் வில்லன் வளர்ந்து வருகிறார்.
நான் சிவப்பு மனிதன் படத்தில் விஷாலால் அறிமுகப்படுத்தப்பட்ட அர்ஜெய், இப்போது சண்டக்கோழி மூலம் பிரபலமாகி இருக்கிறார். சண்டக்கோழிக்கு பிறகு பிரபுதேவாவுடன் தேவி இரண்டாம் பாகம், விஷாலுடன் அயோக்யா, வரட்சுமியுடன் வெல்வெட் நகரம் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: என் நண்பர் மூலம் சண்டக்கோழி 2 படத்துக்கு நடிகர்கள் தேர்வாகும் ஆடிஷன் நடக்கிறது என்று அறிந்தேன். நான் நேரில் சென்று தேர்வானேன். இதைப் பற்றி விஷாலிடம் பிறகு கூறினேன். தன் மூலம் அறிமுகமான நான் இதில் வாய்ப்பு பெற்றதற்காக அவர் மகிழ்ந்தார், வாழ்த்தினார் .

