சமீபத்தில் வெளியான கன்னடப் படமான ராஜா லவ்ஸ் ராதா படத்தின் மூலம் அறிமுகமானவர் ராதிகா ப்ரீத்தி. அடுத்து இரண்டு கன்னட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் ராதிகா ப்ரீத்தி, எம்பிரான என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இதனை மகிழ் திருமேனியின் உதவியாளர் கிருஷ்ணபாண்டி இயக்குகிறார்.
பஞ்சவர்ணம் பிலிம்ஸ் சார்பில் பஞ்சவர்ணம் மற்றும் சுமலதா தயாரிக்கிறார்கள். ராதிகா ப்ரீத்தி ஜோடியாக விக்ரமன் இயக்கிய நினைத்தது யாரோ படத்தின் நாயகன் ரேஜித் நடிக்கிறார், இவர்கள் தவிர மவுலி, கல்யாணி நடராஜன் நடிக்கிறார்கள். புகழேந்தி ஒளிப்பதிவு செய்கிறார், பிரசன் பாலா இசை அமைக்கிறார்.
தமிழில் அறிமுகமாவது பற்றி ராதிகா ப்ரீத்தி கூறியதாவது: எனது முதல் கன்னடப்படமே வெற்றி பெற்றது. அந்த படத்தின் மூலம்தான் தமிழ்பட வாய்ப்பு கிடைத்தது. நான் கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்தாலும் எனது அம்மா தமிழ்நாட்டுப் பெண். அதனால் எனக்கு கன்னடமும், தமிழும் சரளமாகப் பேசத் தெரியும்.
எம்பிரான் படத்தில் நான்தான் டப்பிங் பேசியிருக்கிறேன். தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அதை சீக்கிரமே நிறைவேறி உள்ளது. கிளாமராக நடிக்க மாட்டேன். மற்றபடி மார்டன் கேர்ள், கிராமத்து பெண் கேரக்டர்களில் விரும்பி நடிப்பேன். தமிழ், கன்னடம் இரண்டு மொழிகளிலும் நல்ல நடிகை என்று பெயர் வாங்க வேண்டும் என்பதே என் விருப்பம். என்கிறார் ராதிகா ப்ரீத்தி.

