கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ல் நடந்த உலக கோப்பை போட்டியில் வென்று சாதனை படைத்தது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு 83 என்ற பெயரில் பாலிவுட்டில் திரைப்படமாக தயாராகியுள்ளது. இதில் கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ளார். உலக கோப்பையை வென்ற அணியில் இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடித்துள்ளார்.
இவர்கள் தவிர கவாஸ்கர் வேடத்தில் தாஹிர் ராஜ் பாசினும், மொஹிந்தர் அமர்நாத் வேடத்தில் சாகிப் சலீமும், பல்விந்தர் சிங் வேடத்தில் அம்மீ விரிக், கிரிமானி வேடத்தில் சாஹில் கட்டார், வெங்க் சர்க்கார் வேடத்தில் ஆதிநாத் கோத்தாரி, ரவிசாஸ்திரி வேடத்தில் தாரிய கர்வா நடித்துள்ளனர். கபீர்கான் டைரக்டு செய்துள்ளார். இந்தியில் தயாராகி உள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகிறது.

