66வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் தென்னிந்திய மொழிகளுக்கான திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரையுலகத்திலிருந்து பல சினிமா பிரபலங்கள் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தமிழ்த் திரைப்படங்களுக்கான விருதுகளை வென்றவர்கள் விவரம்…
சிறந்த படம் : பரியேறும் பெருமாள்
சிறந்த இயக்குனர் : ராம் குமார் – ராட்சசன்
சிறந்த நடிகர் – பிரபலமானவர்
தனுஷ் – வட சென்னை
விஜய் சேதுபதி – 96
சிறந்த நடிகர் – விமர்சகர் விருது
அரவிந்த்சாமி – செக்கச் சிவந்த வானம்
சிறந்த நடிகை – பிரபலமானவர்
த்ரிஷா – 96
சிறந்த நடிகை – விமர்சகர் விருது
ஐஸ்வர்யா ராஜேஷ் – கனா
சிறந்த துணை நடிகர்
சத்யராஜ் – கனா
சிறந்த துணை நடிகை
சரண்யா – கோலமாவு கோகிலா
சிறந்த இசையமைப்பாளர்
கோவிந்த் வசந்தா – 96
சிறந்த பின்னணி பாடகர்
சித் ஸ்ரீராம் – ஹே பெண்ணே…. – பியார் பிரேமா காதல்
சிறந்த பின்னணி பாடகி
சின்மயி – காதலே…காதலே… – 96
சிறந்த பாடலாசிரியர்
கார்த்திக் நேத்தா – காதலே…காதலே… – 96
சிறந்த அறிமுக நடிகை
ரைசா வில்சன் – பியார் பிரேமா காதல்
சிறந்த நடன இயக்குனர்
பிரபுதேவா, ஜானி – ரௌடி பேபி… – மாரி 2

