விஷ்ணுவர்த்தன், சுமந்த், மோகினி, ரேவதி நடிப்பில் 1998ம் ஆண்டு வெளிவந்த கன்னடப் படம் நிஷ்யப்தா. தினேஷ்பாபு ஒளிப்பதிவு செய்து, இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் 2ம் பாகம் கடந்த ஆண்டு வெளிவந்தது. இதில் ரூபேஷ் ஷெட்டி, ஆராத்யா ஷெட்டி நடித்திருந்தனர். தேவராஜ் குமார் இயக்கி இருந்தார்.
இது ஒரு ரொமான்டிக் த்ரில்லர் படம். தற்போது நிஷப்தாவின் 2ம் பாகம் தமிழில் மஞ்சக்காடு என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதனை பி.கிருஷ்ணா இயக்குகிறார். அலைன்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

