கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக, கோலிவுட் மட்டுமல்லாமல், பாலிவுட், டோலிவுட் ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வருபவர், தமன்னா. அதிலும், தமிழ், தெலுங்கில், தொடர்ச்சியாக, இவர் நடித்த படங்கள் வெளியாவது வழக்கம்.
எல்லா படங்களிலுமே, முன்னணி நடிகர்களுடன் தான், ஜோடி போடுவார். ஆனால், கடந்தாண்டு, இவர் நடித்த, ஸ்கெட்ச் என்ற ஒரு படம் மட்டுமே வெளியானது. அதுவும் வெற்றிபெறவில்லை. இதனால், ‘தமிழில், தமன்னாவுக்கு ஏற்பட்ட கிராக்கி முடிந்து விட்டது’ என, பேச்சு எழுந்தது. ஆனால், அதிரடியாக மீண்டும் பட வாய்ப்புகளை கைப்பற்றியுள்ளார், தமன்னா.
தற்போது, கண்ணே கலைமானே,தேவி – 2 ஆகிய தமிழ் படங்களிலும், தலா, இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். ‘எனக்கு, 29 வயது தான் ஆகிறது. அவ்வளவு சீக்கிரம், தமிழ் ரசிகர்களை விட்டு போய் விட மாட்டேன். இன்னும், ஐந்து ஆண்டுகளாவது, தமன்னாவின் கொடி, தமிழ் சினிமாவில் பறக்கும்’ என்கிறாராம், தமன்னா.

