சிரஞ்சீவி நடித்து வெளிவந்துள்ள ‘சைரா’ படத்தில் அவருடைய காதலியாக தமன்னா நடித்துள்ளார். படத்தின் கதாநாயகி நயன்தாரா என்று சொல்லப்பட்டு விளம்பரங்களில் அவருக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும் படத்தில் தமன்னா கதாபாத்திரம்தான் ரசிகர்களை அதிகமாகக் கவர்ந்தது.
படத்தின் எந்த ஒரு பிரமோஷன் நிகழ்ச்சியிலும் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. ஆனால், தமன்னா நான்கு மொழிகளிலும் நடந்த பிரமோஷன் நிகழ்வுக்குச் சென்று கலந்து கொண்டு அவருடைய ‘சைரா’ அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
படத்தின் தயாரிப்பாளரான சிரஞ்சீவியின் மகனும் நடிகர் ராம் சரணின் மனைவி உபாசானா, நடிகை தமன்னா இருவரும் நெருங்கிய தோழிகளாம். ‘சைரா’ படத்தில் தமன்னாவின் நடிப்பைப் பாராட்டி உபாசான ஒரு பெரிய கிரிஸ்டல் மோதிரம் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார். அதற்கு தமன்னாவும் நன்றி தெரிவித்துள்ளார்.
நயன்தாராவுக்கு எந்த கிப்ட்டும் இல்லையா ?.

