டான்ஸ் மாஸ்டர் நடிகர் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், சோனாக்ஷி சின்ஹா, கிச்சா சுதீப் நடித்துள்ள படம் ‛தபங் 3′ நாளை உலகமெங்கும் வெளியாகிறது.
இப்படத்தை சல்மான்கான் தயாரித்துள்ளார்.
இப்பட புரமோசனுக்காக சென்னை வந்த சல்மான்கான் நிருபர்களிடம் சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது…
எப்போதும் தென்னிந்திய படங்களை ரீ-மேக் செய்வதில் எனக்கு அதிக ப்ரியம் உண்டு. விக்ரம் நடித்த ‛சேது’ படத்தை ரீமேக் செய்து நடித்தேன்.
வாண்டட் படத்தின் ஷூட்டிங்க்கு சென்னை வந்திருந்தேன். நடிகராக ஆவதற்கு முன்பே ஒரு விளம்பரபடத்திற்காக சென்னை வந்துள்ளேன்.
பிரபுதேவா ஒர்க்கிங் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும். என்னை நன்றாக ஆட வைப்பார், காமெடி செய்ய வைப்பார்.
அதனால்தான் தபங் 3 ஐ அவரை இயக்கச் சொன்னேன். அவருடன் அடுத்த படமும் செய்கிறேன்.
தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான் இந்த படத்தில் நிறைய வேலைகள் செய்துள்ளனர்.
இப்போது நிறைய தமிழ் படங்கள் முக்கியமாக ரஜினி கமல் விக்ரம் படங்கள் பாலிவுட்டில் வெற்றி பெறுகிறது.
பாகுபலி, எந்திரன் படங்களை நாங்க ரசித்தோம். அதுபோல தபங் உள்ளிட்ட எங்களது படங்களையும் நீங்க ரசிக்கனும். அதனை வெற்றி பெற வைக்க வேண்டும்”. என சல்மான்கான் பேசினார்.

