தற்போது, படப்பிடிப்புக்காக, லண்டனில் இருக்கும் தனுஷ், அவரது, அடுத்த படத்தை இயக்க இருக்கும், மாரி செல்வராஜை சந்தித்து, ஆலோசனை நடத்தி வருகிறார்.
படத்தின் கதையில் ஒன்றிப்போன தனுஷ், ”கதை, மிக இயல்பாக உள்ளது. இதற்கு, முன்னணி நாயகியர் வேண்டாம். புதுமுகத்தை அறிமுகப்படுத்தலாம். ஒரே நிபந்தனை, அவர் நன்றாக தமிழ் பேச வேண்டும்,” எனக் கூறியுள்ளார்.

