துருவங்கள் 16 படம் மூலம் கவனம் ஈர்த்தவர் கார்த்திக் நரேன். அடுத்து நராகசூரன் என்ற படத்தை இயக்கினார். இப்படம் நிதி சிக்கலால் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.
இதையடத்து அருண் விஜய்யை வைத்து மாபியா என்ற படத்தை எடுத்துள்ளார். இப்படம் பிப்.,21ல் ரிலீஸாக உள்ள நிலையில் அடுத்தப்படியாக தனுஷை இயக்குகிறார். தனுஷின் 43வது படமாக உருவாகும் இதனை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.
ஏற்கனவே இந்நிறுவனம் தனுஷை வைத்து தொடரி, சமீபத்தில் வந்த பட்டாஸ் படங்களை தயாரித்தது. மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கின்றன. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அக்டோபரில் படத்தை வெளியிட உள்ளனர்.

