தமிழ் சினிமா ஹீரோக்களில் முதலமைச்சர் நாற்காலி மீது கண் வைக்காத ஹீரோக்களே இல்லை என்கிற அளவுக்கு பல ஹீரோக்களுக்கு அவர்களின் அடிமனதில் அரசியல் ஆசை இருக்கிறது.
இதற்கு தனுஷும் விதிவிலக்கில்லை. சில தினங்களுக்கு முன் தனுஷின் பிறந்தநாள் வந்தபோது, வருங்கால தமிழக முதல்வரே என்று அவரை வாழ்த்தி சென்னை நகரம் எங்கும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் தனுஷின் அலுவலகத்தின் வாசலிலும் ஒட்டப்பட்டது தான் ஆச்சர்யம்.
தனுஷுக்கு தற்போது 35 வயது. எதிர்காலத்தில் அவருக்கும் அரசியல் ஆசை இருக்கிறது போன்றே தெரிகிறது. ஏற்கனவே தனது ரசிகர்மன்ற வட்டாரத்தையும் வலுப்படுத்தி வருகிறார். சமீபத்தில் இதன் தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

