ட்விட்டரில் அப்பா கமல் ஹாஸன், அங்கிள் ரஜினியை முந்தியுள்ளார் நடிகை ஸ்ருதி ஹாஸன். ஸ்ருதி ஹாஸனுக்கு ட்விட்டரில் ஏராளமான ரசிகர்கள், ரசிகைகள் உள்ளனர். ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ரசிகர்களுடன் டச்சில் உள்ளார்.ரசிகர்களின் ட்வீட்டுக்கு பதில் அளிப்பார். இந்நிலையில் அவர் ட்விட்டரில் புதிய சாதனை படைத்துள்ளார்.ஜினிகாந்த், கமல் ஹாஸன் ஆகியோரை ட்விட்டரில் பின்தொடர்வோரின் எண்ணிக்கை இன்னும் 5 மில்லியனை தொடவில்லை. ரஜினியை 4.6 மில்லியன் பேரும், கமலை 4.5 மில்லியன் பேரும் பின்தொடர்கிறார்கள்.
ட்விட்டரில் ஸ்ருதி ஹாஸனுக்கு ரஜினியை விட அதிக ஃபாலோயர்கள் இருக்கலாம். ஆனால் தனுஷ் ஸ்ருதியை முந்திவிட்டார். ட்விட்டரில் தனுஷை 7.25 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள்.
ஸ்ருதி ஹாஸன் புதுப்படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை. அவர் தனது காதலரான மைக்கேலை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகக்கூடும் என்று கூறப்படுகிறது.