அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் டுவிட்டர் பதிவுகள் பிரிண்ட் செய்யப்பட்ட ‘டாய்லெட் பேப்பர்’ வெள்ளிக்கிழமை காலை அமேஸான் இணையதளத்தில் விற்பனைக்கு வந்த சில மணி நேரத்தில் முழுவதுமாக விற்றுத் தீர்ந்துவிட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பிடிக்காதவர்கள், அதனை வெளிப்படுத்த மிக எளிதான ஒரு வழியை உருவாக்கிக் கொடுத்துள்ளது அமேஸான் நிறுவனம்.
அதன்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகள் பிரிண்ட் செய்யப்பட்ட ‘டாய்லெட் பேப்பர்’களை விற்பனை செய்துள்ளது. வெள்ளிக்கிழமை காலையில் இதுத்தொடர்பான விளம்பரம் வெளியானது. ‘டாய்லெட் பேப்பர்’ முழுவதுமாக விற்றுத் தீர்ந்ததால் அன்று மதியமே விளம்பரம் அகற்றப்பட்டது.
இந்த ‘டாய்லெட் பேப்பர்’-ல், டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராவதற்கு முன்பே தனது டுவிட்டரில் பதிவு செய்த கருத்துகள் கூட இடம்பெற்றிருந்தது. அதாவது 2013ம் ஆண்டில் இருந்து அவர் டுவீட் செய்த கருத்துகள் இடம்பெற்றிருந்தன.
அமேஸான் நிறுவனரும், வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்துக்கு சொந்தக்காரருமான ஜெஃப் பிஸோஸை, சில மாதங்களுக்கு முன்பு டொனால்ட் ட்ரம்ப் கடுமையான விமர்சித்திருந்தார். வாஷிங்டன் போஸ்ட்டில் தவறான செய்திகள் வெளியாவதாக அவர் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.