சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் கதாநாயகி நயன்தாரா தவிர்த்து அந்த படத்தில் விளையாட்டு வீராங்கனைகளாக நடித்த சில நடிகைகள் கவனம் ஈர்த்தனர். அதில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட வீராங்கனையாக நடித்திருந்த ரெபா மோனிகா ஜானும் ஒருவர். மலையாள நடிகையான இவருக்கு படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததுடன் இவரது நடிப்பு பாராட்டும் பெற்றுள்ளது.
இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி வரும் பாரன்சிக் என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் ரெபா மோனிகா ஜான். படத்தில் மம்தா மோகன்தாஸ் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அகில் பால் மற்றும் அனஸ் கான் என்கிற இரட்டை இயக்குனர்கள் இந்த படத்தை இணைந்து இயக்குகின்றனர்

