டெஸ்ட் அரங்கில் 5000 ரன்கள் எடுத்தார் கேப்டன் கோஹ்லி.
இந்திய அணி கேப்டன் கோஹ்லி, 29. மூன்று வித கிரிக்கெட்டிலும் அசத்தல் ஆட்டத்தை வௌிப்படுத்தி வருகிறார். டில்லி போட்டியில் லக்மல் பந்தில் பவுண்டரி அடித்த கோஹ்லி, டெஸ்ட் அரங்கில் 5000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.
இந்த இலக்கை எட்டிய 11வது இந்திய வீரர் ஆனார். இதுவரை 63 போட்டியில் 5013 ரன்கள் எடுத்துள்ளார். தவிர, குறைந்த இன்னிங்சில் இந்த இலக்கை எட்டிய இந்திய வீரர்களில் நான்காவது இடம் பிடித்தார் கோஹ்லி.
இதன் விவரம்:
வீரர் இன்னிங்ஸ் எடுத்த ஆண்டு
கவாஸ்கர் 95 1979
சேவக் 99 2008
சச்சின் 103 1999
கோஹ்லி 105 2017
டிராவிட் 108 2002
இந்திய அணி கேப்டன் கோஹ்லி. நேற்று 43 ரன்கள் எடுத்த போது, டெஸ்ட் (5014), ஒருநாள் (9030), ‘டுவென்டி–20’ (1956) என, மூன்று வித கிரிக்கெட்டிலும் சேர்த்து, 16,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். தவிர, குறைந்த இன்னிங்சில் இந்த இலக்கை எட்டிய முதல் வீரர் ஆனார் கோஹ்லி (350 இன்னிங்ஸ்). அடுத்த இடங்களில் தென் ஆப்ரிக்காவின் ஆம்லா (363), வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா (374) உள்ளனர்.