டீசல் கார் என்ஜின்கள் தயாரிப்பில் விதிமுறை எதையும் மீறவில்லை என பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தெரிவித்துள்ளது.
கார் என்ஜின்களில் இருந்து மாசு வெளியேற்றும் பிரச்சனையில், ஆடி, டெய்ல்மர், பி.எம்.டபிள்யூ உள்ளிட்ட கார் நிறுவனங்கள் பல ஆண்டுகளாக ரகசிய உடன்பாடு செய்துகொண்டு செயல்படுவதாக ஜெர்மனியைச் சேர்ந்த பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இதையடுத்து அதிகளவில் மாசு வெளியேற்றியதற்காக ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்திற்கு அண்மையில் கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதே பிரச்சனைக்காக 8 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்களை ஆடி நிறுவனம் வாபஸ் பெற்றது. இதனிடையே, தங்கள் கார் என்ஜின்களில் எந்தவித தவறோ, தில்லுமுல்லோ செய்யவில்லை என பி.எம்.டபிள்யூ விளக்கம் அளித்துள்ளது.